லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்தில் இணைந்த முன்னணி நடிகர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட இலங்கையை சேர்ந்த லாஸ்லியா என்பவர் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
ரசிகர்களிடம் பிரபலமான லாஸ்லியா அண்மையில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஏற்றுக்கொண்டார்.
தற்போது லாஸ்லியா கதாநாயகியாக நடிக்க இருக்கும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.