ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் ரூபாய் 175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஆனது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில்கள், வணிக வளாகங்கள், மால்கள் என பொதுமக்கள் கூடும் பல இடங்கள் மூடப்பட்டிருந்தன. அதேபோல் பலருக்கு தொழில்கள் ஓடாமலும், வேலைக்குச் செல்ல முடியாமலும், பலருக்கும், பல துறைகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அதே போல் தற்போதும் பல பிரபல கோவில்களில் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் மட்டும் ரூபாய் 175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி பழனி முருகன் கோவிலில் ரூபாய் 50 கோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகியவற்றில் தலா 40 கோடியும், திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூபாய் முப்பது கோடியும், அதேபோல் திருத்தணி கோவிலில் ரூபாய் 20 கோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூபாய் 5 கோடி , சிதம்பரம் நடராஜன் கோவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் என மொத்தம் 175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.