Categories
மாநில செய்திகள்

வாசனை, சுவை தெரியவில்லையா?… கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம்: மத்திய சுகாதாரத்துறை!

வாசனை மற்றும் சுவை தெரியவில்லை என்றால் அது கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கான அறிகுறிகள் குறித்து மத்திய அமைச்சகம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக இருமல், தொண்டை வறட்சி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சுவாசக்கோளாறு, இருமல், தசைபிடிப்பு நோய், ரைனோரியா, தொண்டை வலி, இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட நோய் அறிகுறிகள் இவை ஆகும். தற்போது, சுகாதார அமைச்சகத்தின் அறிகுறிகளின் பட்டியலில் வாசனை இழப்பு (அனோஸ்மியா) மற்றும் சுவை இழப்பு (ஏஜுசியா) ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |