தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பிறகு அங்காடித்தெரு என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அஞ்சலிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் தற்போது ஃபால் என்ற வெப் தொடரில் நடித்துள்ளதோடு, சங்கர் இயக்கத்தில் ஆர்சி 50 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கடந்த 2 வருடங்களாகவே நடிகை அஞ்சலியின் படங்கள் எதுவும் தமிழில் ரிலீஸ் ஆகவில்லை. இது தொடர்பாக நடிகை அஞ்சலி தற்போது ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஒரு நபருடன் ஏற்பட்ட தவறான ரிலேஷன்ஷிப்பால் என்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனதால் அந்த உறவு தவறான உறவாக ஆகிவிட்டது. என்னுடைய கேரியருக்கு தடையாக இருந்த உறவை விட என்னுடைய கேரியர் தான் எனக்கு முக்கியம். அதோடு என்னுடைய கேரியரில் கவனம் செலுத்துவது தான் சிறந்தது என்றும் கூறியுள்ளார். நடிகை அஞ்சலியூடம் நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நபர் யார் என்று கேட்ட போது அவரின் பெயரை கூறுவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் நடிகை அஞ்சலியின் பேட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் நடிகை அஞ்சலி நடிகர் ஜெய்யை காதலித்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த காதல் தோல்வியில் முடிவடைந்தது. அதோடு பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்ததால்தான் நடிகை அஞ்சலி படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார் என்றும் கிசுகிசுக்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.