தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கல் கிராமப்பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கீழ்வேளூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் கோவில் ஆர்ச் பகுதியில் ஹசனா மரைக்காயர் என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனே அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த 7 லாட்டரி சீட்டுகளையும் 250 ரூபாய் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.