Categories
உலக செய்திகள்

“ஆஹா! சூப்பர் பா”…. தடுப்பூசி செலுத்தினால் லாட்டரி பரிசு…. அருமையாக அறிவித்த நாடு…!!!

ஆஸ்திரிய நாட்டில் மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதை ஊக்குவிப்பதற்காக  லாட்டரி பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரிய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 72% பேர் கொரோனாவிற்கு எதிரான இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டுள்ளனர். எனினும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிகவும் குறைவு தான்.

எனவே, அரசு மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக லாட்டரி சீட்டு அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன்படி, மக்கள் ஏற்கனவே தடுப்பூசி எடுத்திருந்தாலும், இனிமேல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள போவதாக இருந்தாலும், ஒரு தவணை தடுப்பூசிக்கு ஒரு லாட்டரி சீட்டு கொடுக்கப்படும்.

பூஸ்டர் தவணை எடுத்துக்கொள்பவர்களுக்கு 3 லாட்டரி சீட்டுகள் கொடுக்கப்படும். ஒவ்வொரு பத்தாவது லாட்டரி சீட்டிற்கும் 500 யூரோக்கள் பரிசாக கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது இந்திய மதிப்பில் 42 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Categories

Tech |