Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரையாம்புதூர் பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கரையாம்புதூர் பகுதியில் வசிக்கும் சேதுமாதவன் என்பதும் அவர் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சேதுமாதவனை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த 45 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |