பிரிட்டனை சேர்ந்த தம்பதியர் லாட்டரியில் கிடைத்த பரிசுத் தொகை மூலம் ஊரடங்கு காலகட்டத்தில் சிரமப்படும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.
பிரிட்டனில் உள்ள கோவென்ட்ரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பில்- கேத் முல்லர்கி. இத்தம்பதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு லாட்டரியில் ஒரு மில்லியன் பவுண்ட் பரிசாக கிடைத்துள்ளது. அப்போது பணக்காரர்களாக மாறிய இந்த தம்பதிகள் இந்த பணத்தைக் கொண்டு தற்போது கோவென்ட்ரி பகுதியில் ஊரடங்கு காலக்கட்டத்தில் சிரமப்படும் ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்பது குறித்து தனது மனைவியுடன் பில் ஆலோசித்து உள்ளார். அவரது மனைவி கேத் முல்லர்கி-க்கும் இதில் உடன்பாடு இருந்ததால் இருவரும் சமையல் வேலையில் உடனடியாக களமிறங்கியுள்ளனர்.
ஆனால் ஒரு சமையல் கலைஞரை நியமனம் செய்து அவர் சமையல் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணிய அந்த தம்பதி உடனடியாக செஃப் ஜிம் ஈவ்ஸ் என்பவரை பணியில் அமர்த்தி உள்ளனர். கடந்த வாரம் தொடங்கி தற்போது வரை அப்பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கும் முதியவர்களுக்கும் பில்- கேத் முல்லர்கி தம்பதியர் உணவை வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 100 முதியவர்களுக்கு அருமையான விருந்து படைத்ததை தம்பதியர் குறிப்பிட்டுள்ளனர்.