Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டும்னு சொல்வாங்களே…. அது இதுதானா…?

அமெரிக்காவில் மிகப்பெரிய பரிசு தொகை விழுந்த லாட்டரி சீட்டை குப்பைதொட்டியில் வீச நினைத்த நபருக்கு அதிர்ஷ்டம் தேடி வந்திருக்கிறது.

அமெரிக்காவில் வசிக்கும் ஜான் கோர்ன்வெல், என்பவர் லாட்டரி டிக்கெட்டை வாங்கிய பின், நமக்கு என்றைக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது என்று கருதி அதனை தூக்கி குப்பையில் வீச சென்றிருக்கிறார். எனினும், ஒரு முறை விழுந்திருக்கிறதா? என்று பார்த்து விடுவோம் என்று லாட்டரி அலுவலகத்திடம் கேட்டிருக்கிறார்.

அதன் பின்பு, தான் அவருக்கு $277,086 பரிசுத்தொகை விழுந்தது தெரியவந்திருக்கிறது. அப்போதுதான் ஜான், நல்லவேளை லாட்டரி டிக்கெட்டை கிழித்து குப்பைத் தொட்டியில் போடாமல் இருந்தோம். அப்படி செய்திருந்தால் வாழ்வில் நாம் செய்த மிகப்பெரிய தவறு அது தான் என்று உணர்ந்திருக்கிறார். பரிசு பணத்தில் புதிய வாகனத்தை வாங்கி மனைவிக்கு பரிசளிக்கப்போவதாக ஜான் கூறியிருக்கிறார்.

Categories

Tech |