தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் டவுன் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கரூர் மாரியம்மன் கோவில் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராமச்சந்திரன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் பசுபதிபாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்ததால் காவல்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.