தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ராஜகுலராமன் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக சத்திரப்பட்டி நத்தம்பட்டி விலக்கு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் சங்கரபாண்டியபுரம் வடக்கு தெருவில் வசித்துவரும் மருது என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.