சட்ட விரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் முன்பாக சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பதும், சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய முயன்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 13 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.