சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் எஸ்.வி.புரம் பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராமசாமியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.