தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெம்பக்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கணபதி என்பதும் மேலும் அவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கணபதியை கைது செய்ததோடு அவரிடமிருந்த 98 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.680-யும் பறிமுதல் செய்தனர்.