சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக வாலிபர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அன்னவாசல் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சோதனையில் அகமத்கான் என்பவர் பெட்டிக் கடையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து அகமத்கானை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 17 சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.