சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் பாப்பான்குளம் ரயில்வே கேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு ஒரு நபர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அந்த நபர் அதே பகுதியில் வசித்து வரும் ஆனந்த் என்பதும், அவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும், செல்போனையும் பறிமுதல் செய்த போலீசார் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.