சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விட்டனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அப்பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வசிக்கும் பரசுராமன் என்பதும், அவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக பரசுராமனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விட்டனர்