சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அண்ணா மார்க்கெட் பகுதியில் இருக்கும் காய்கறி கடையில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக காய்கறி கடை ஒன்றில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக சந்திரன், ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் 1,800 ரூபாய் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.