அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறை லாட்டரி சுரண்டியதில் 8 மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்
அமெரிக்காவை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு லாட்டரி டிக்கெட்டில் இரண்டு முறை பரிசுத் தொகையாக 4 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த மார்க் கிளர் க் என்பவர் தான் அந்த அதிர்ஷ்டசாலி. இதுகுறித்து அவர் கூறிய போது ஒருமுறை கூட நான் கோடிஸ்வரன் ஆவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் இரண்டு முறை கோடீஸ்வரன் ஆகியுள்ளேன். எனது மகிழ்ச்சியை வார்த்தைகளால் எப்படி சொல்வது என்று கூட தெரியவில்லை .
2017 ஆம் ஆண்டு பெட்ரோல் நிலையத்திற்கு சென்ற சமயம் சுரண்டல் லாட்டரி வாங்கினேன். அப்போது எனக்கு நாலு மில்லியன் பரிசு தொகை கிடைத்தது. அதேபோன்று இந்த மாதமும் எனக்கு லாட்டரியில் அதே 4 மில்லியன் டாலர் பரிசாக கிடைத்துள்ளது. எனது தந்தை பத்து வருடங்களுக்கு முன்பு கொடுத்த சில்லறையை வைத்து தான் லாட்டரி டிக்கெட் சுரண்டினேன். அதனால்தான் எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது . உடல்நலக்குறைவால் எனது தந்தையை நான் இழந்தேன். ஆனால் அவர் கொடுத்த இந்த அதிர்ஷ்டமான நாணயத்தால் தான் இந்தப் பரிசுத்தொகையை வென்றெடுத்தேன் என்று கூறியுள்ளார்.