லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவரம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன் பிறகு கணேசன் அப்பகுதியில் நூதன முறையில் லாட்டரி சீட்டை அதிக விலைக்கு விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனிடமிருந்த 750 ரூபாயை பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.