Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…..!!

சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள வாகன காப்பகத்தில் எதிரே சந்தோஷ் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்தார். அதன்பிறகு காவல்துறையினர் சந்தோஷ் என்பவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனை அடுத்து சந்தோஷ் வெள்ளை காகிதத்தில் கேரளா லாட்டரி டிக்கெட் என்று கூறி பொய்யான எண்களை எழுதி பொதுமக்களிடம் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிந்த சந்தோஷை கைது செய்து அவரிடமிருந்த 550 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |