Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மலர போகும் தாமரை…. MGRஆக மாறிய எல்.முருகன்…. வெறித்தனமான வீடியோ வெளியீடு …!!

தமிழக அரசின் தடையை மீறி பாஜகவின் வேல் யாத்திரை தொடங்கி, அக்கட்சி தலைவர் ”வேல்”லை எடுத்துக்கொண்டு திருத்தணி சென்றுள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திருத்தணி தொடங்கி திருச்செந்தூர் வரை நடைபெறும் இந்த யாத்திரையில் பல இடங்களில் பாஜகவின் தேசிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் பாஜக தெரிவித்து இருந்தது. வேலல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து நேற்று தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்து.

அனாலும் தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறும் என்று பாஜக அறிவித்தது. பாஜக சொன்னபடியே தடையை மீறி சற்று முன்பாக வேல் யாத்திரை தொடங்கியுள்ளது. இந்த யாத்திரைக்கு பாஜக சார்பில் உருவாக்கப்பட்ட வீடியோ நேற்று இரவு பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

வெள்ளை நிற குதிரையில் கருப்பசாமி வாராரு, வீச்சருவா மின்னுதப்பா என்ன செய்ய போறாரு, வீரத்தலைவன் எங்க முருகன்‌ பக்கம் வாராரு, நாளா வெற்றியும் வர நல்ல வாக்கு தாராரு பாஜக கலை கலாச்சாரப் பிரிவு சார்பாக #வெற்றிவேல்_யாத்திரை தயாரிக்கப்பட்டுள்ள பாடலில் பல இடங்களில் எம்.ஜி.ஆர் இடம்பெற்றுள்ளார். அவரை போலவே பாஜக தலைவர் எல்.முருகனும் இடம்பெற்று காட்சிகள் வருகின்றன.தமிழகத்தில் பாஜக நிச்சயம் மலரும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |