காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவரை காதலியின் உறவினர்கள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராம். இவருடைய மகன் ஹரிஹரன். இவர் அந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் வேலன் என்பவருடைய மகள் மீனாவும், ஹரிஹரனும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் ஹரிஹரன், மீனாவிற்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து மீனாவின் குடும்பத்தினர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்புறம் வரவழைத்துள்ளனர்.
அப்போது ஹரிஹரனிடம் மீனாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மீனாவின் உறவினர்கள் ஹரிஹரனை தாக்கியுள்ளனர். அப்போது மீனாவின் உறவினர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த ஸ்டிக்கர் வெட்டும் கத்தியால் ஹரிகரன் முதுகில் கிழித்துள்ளதார். அப்போது நிலை தடுமாறி ஹரிஹரன் தரையிப் விழுந்துள்ளார். பின்னர் மீனாவின் உறவினர்களே ஹரிஹரனை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஹரிஹரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஹரிஹரன் பெற்றோர் கொடுத்துள்ள புகாரி பேரில், மீனாவின் உறவினர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து பட்டபகலில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.