ஒரு மாதம் கழித்து சந்தித்த தாய் மற்றும் குழந்தையின் பாசப்பிணைப்பு வீடியோவாக மாறி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துருக்கியில் மருத்துவ செயலாளராக பணிபுரிந்து வரும் ஓஸ்ஜி என்பவர் கொரோனா தொற்று பரவ தொடங்கியதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டார். இதனால் தனது 6 வயது மகளின் பாதுகாப்பு கருதி பாட்டி வீட்டில் விட்டிருந்தார். இந்நிலையில் ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் தனது மகளுடன் நேரத்தை செலவிட எண்ணிய ஓஸ்ஜி, தனது மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்துள்ளார்.
https://youtu.be/wLEUM-_-hh0
இதனால் மகள் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்ற தாயைப் பார்த்ததும் செய்வதறியாமல் நின்ற மகள் சைக்கிளை வைத்துவிட்டு தாயின் அருகே ஓடி வந்து கட்டி அணைத்து அழுதுள்ளார். இருவரது இடையே இருந்த பாசப்பிணைப்பு காண்போர் கண்களை கலங்க வைத்துள்ளது. அவர்களின் பாசத்தை உணர்த்தும் வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.
https://youtu.be/wLEUM-_-hh0