Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எங்களை பிரிச்சிடுவாங்கனு பயமா இருக்கு… பாதுகாப்பு கேட்டு தஞ்சம்… காவல்நிலையத்தில் காதல் ஜோடி…!!

காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள செங்காட்டுப்பட்டி செட்டி பிள்ளையார் கோவில் தெருவில் ஜீவா என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திரம் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் அதவத்தூர் பாளையம் பகுதியில் வசித்து வரும் பாக்கிய லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜாதியை காரணம் காட்டி பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இருவரும் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

இதனையடுத்து புதுமண தம்பதிகள் இருவரும் சமயபுரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து விட்டனர். அதன்பின் இவர்களின் பெற்றோர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு இரு வீட்டு பெற்றோர்களையும் சமாதானம் செய்த பிறகு புதுமணத் தம்பதிகளை அவர்களுடன் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |