Categories
தேசிய செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி…. அழைத்து வந்த உறவினர்கள்…. பின் நடந்த கொடூரம்…!!

வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியை உறவினர்கள் அழைத்து வந்து கொலை செய்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஹாரி என்ற இளைஞர் கிருஷ்ணா நகரை சேர்ந்த உறவினரான ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரது காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவர பெண்ணின் மாமா ராமு மற்றும் சகோதரர் சரண் இருவரும் பெண்ணை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீஹாரி ஐஸ்வர்யாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அவரை கடுமையாக திட்டி வீட்டை விட்டு வெளியில் அனுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அதன்பிறகு அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெண்ணின் உறவினர்கள் அவர்களிடம் சாமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஊருக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் ஐஸ்வர்யா மற்றும் ஸ்ரீஹாரிக்கு ராமு மற்றும் சரண் இருவரும் சேர்ந்து விஷம் வைத்து கொலை செய்தனர். உயிரிழந்த அவர்களை ஊரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஜெவ்ரா சிர்சா கிராமத்தில் உள்ள ஆற்றின் அருகே வைத்து எரித்தனர்.

மறுநாள் பாதி எரிந்த நிலையில் சடலம் கிடப்பதைப் பார்த்த ஊர்மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொண்டு ஐஸ்வர்யாவின் மாமா ராமு மற்றும் சகோதரர் சரண் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Categories

Tech |