Categories
இந்திய சினிமா சினிமா

தனுஷ், அக்ஷய் குமார் நடிக்கும் ‘அட்ராங்கி ரே’ – லேட்டஸ்ட் அப்டேட்..!!

அக்ஷய் குமார், சாரா அலிகான் நடிக்கும் ‘அட்ராங்கி ரே’ படத்தின் முக்கிய அறிவிப்புகளை அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் ‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாலிவுட்டில் நடிக்கும் படம் ‘அட்ராங்கி ரே’. இந்தப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிரபல இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும், இதன் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதனிடையே படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கிய வண்ணமயமான காணொலியை அக்ஷய் குமார் தற்போது வெளியிட்டுள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக, தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு ‘சுருளி’, ‘கர்ணன்’ படங்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |