Categories
சினிமா தமிழ் சினிமா

“காதல் ஓர் அழகான உணர்வு”…. கண்டிப்பா நான் திருமணம் செய்வேன்…. நடிகை அஞ்சலி ஓபன் டாக்….!!!!!

தமிழ் சினிமாவில் அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் தற்போது வெப்சீரிசில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு அஞ்சலி நடித்துள்ள ஃபால் வெப் தொடர் ஹாட் ஸ்டார் ரிலீஸ் ஆவதால் ப்ரொமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார். இந்நிலையில் நடிகை அஞ்சலியிடம் சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். என்னுடைய திருமணத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். அதோடு முன்பெல்லாம் திருமணத்திற்கு பிறகு நடிக்க வரமாட்டார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது என்றும் அஞ்சலி கூறியுள்ளார். இதனையடுத்து அஞ்சலியிடம் காதல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு காதல் என்பது ஒரு அழகான உணர்வு என்று கூறினார். மேலும் காதலை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

Categories

Tech |