Categories
உலக செய்திகள்

சுற்றுலா வந்த இடத்தில் face bookல் மலர்ந்த காதல்!

பிரித்தானியாவை சேர்ந்த 62 வயது  Isabell dibble  என்ற பெண்னுக்கு  மூன்று முறை திருமணம் ஆன நிலையில் மூன்று கணவர்களும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டில் Tunisia நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள காபி ஷாப்பில் பொழுதை போக்கியுள்ளார். இந்நிலையில் அங்கு பணிபுரியும் Bayram என்ற ஊழியர் உடன் நட்பாக பழகியுள்ளார்.

பின்னர் சொந்த நாட்டுக்கு திரும்பிய அவர் காபி ஷாப் ஊழியர்களுடன் பேஸ்புக்கில் நட்பாக விரும்பினார். ஆனால் தவறுதலாக அதே நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய Bayram என்ற பெயரைக் கொண்ட வேறு இளைஞருடன் பேஸ்புக்கில் பேசினார்.

இதையடுத்து அந்த இளைஞர்  ‘டீசெண்டாக நீங்கள் நினைக்கும் நபர் நான் இல்லை’ என கூறினார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து  பேஸ் புக்கில் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் இந்த நட்பு போன் செய்து பேசும் அளவிற்கு வளர்ந்தது. பின்பு  இருவரும் மாறி மாறி  மணிக்கணக்கில் போனில் பேசினார்கள்,பின்னர்  நட்பானது காதலாக மாறி இருவரும் உயிருக்கு உயிராக நேசிக்க தொடங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து மீண்டும் டுனீசியாவிற்கு (Tunisia) சென்ற காதலி Isabell காதலன் Bayram  சந்தித்தார். பின்னர் இருவரும் அங்கேயே கடந்த மாதம் ஜனவரியில் திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து Isabell கூறுகையில்: எங்கள் காதல் கதையே சுவாரஸ்யமானதுதான் பேஸ்புக்கில் தவறுதலாக ஏற்பட்ட  நட்பால்  காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

முதலில் எங்கள் வயது வித்தியாசத்தை நினைத்து இரு குடும்பத்தாரும் பயந்தார்கள். எனக்கு பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளனர். நான் மூன்று கணவரை இழந்தவள் நான் மனதார இளமையாகவே உள்ளேன்..என கூறினார்.

Bayram கூறுகையில்,  நாங்கள் முதலில் சந்திப்பதற்கு முன்னர் ஆறு மாதங்கள் போனில் பேசினோம்.  நான் என் மனைவியை வயதான பெண்ணாக பார்க்கவில்லை அவரை நல்ல குணமுள்ள பெண்ணாக பார்க்கிறேன்.. என கூறியுள்ளார்.

Categories

Tech |