Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவங்களால வர முடியல… பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி… காவல்துறையினரின் நடவடிக்கை…!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜாவும் வடக்கம்பட்டி பகுதியில் வசிக்கும் செல்வி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு குடும்பத்தினரும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு இருவரும் தஞ்சம் அடைந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் ஊரடங்கு நேரம் என்பதால் அவர்களால் காவல் நிலையத்திற்கு வர முடியவில்லை. எனவே காவல் துறையினர் இருவரும் மேஜர் என்பதால் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |