Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெண் கேட்டு சென்ற பெற்றோர்…. காதலர்களின் திடீர் முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பஞ்சப்பள்ளி பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள் குட்டலபள்ளி கிராமத்தில் வசிக்கும் மோனிஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அருளின் பெற்றோர் மோனிஷாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர்.

ஆனால் மோனிஷாவின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் ஓசூர் அருகில் இருக்கும் சிவன் கோவிலில் காதலர்கள் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து விட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |