Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 6 மாதம்தான் ஆச்சு… காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

காதல் திருமணம் செய்து கொண்ட 6 மாதத்திலேயே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதங்களுக்கு முன்பு சந்திரசேகர் ஜெயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்திரசேகர் தினமும் குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்ற அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணின் தற்கொலை விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |