Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான்கு வருட காதல்…. பட்டதாரி பெண்ணின் துணிச்சல் செயலால்…. கைகூடிய திருமணம்….!!!!

பெண் ஒருவர் வாலிபரை போலீசார் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரண் என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக ஒலிபெருக்கி நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இவரும் வீர சோழபுரத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகளான நந்தினியும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நந்தினியிடம் கரண் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அவரிடம் நெருங்கி பழகி உள்ளார். இதனால் நந்தினி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். அதன்பின் நந்தினி கரணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இது பற்றி கரண் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் நந்தினி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி இரு வீட்டாரையும் அழைத்து பேசி விசாரணை நடத்தியுள்ளார். ஆனால் கரண் குடும்பத்தினரோ நந்தினியை திருமணம் செய்வதற்கு மறுத்த தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கரண் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் நந்தினியை திருமணம் செய்ய கரண் சம்மதம் தெரிவித்தார். மேலும் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்ததால் கரண் நந்தினி திருமணம் அருகில் உள்ள கோவிலில் நடைபெற்றது. அதன் பின் போலீசார் கரணுக்கும் நந்தினிக்கும் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

 

Categories

Tech |