Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மாப்பிள்ளைக்கு இன்னும் வயசு வரல” நிறுத்தப்பட்ட காதல் திருமணம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

20 வயது வாலிபருக்கு நடக்கவிருந்த காதல் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் 20 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபரும் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் குளச்சலில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த நிலையில் மாப்பிள்ளை திருமண வயதை அடையவில்லை என மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினிக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி அதிகாரிகள்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது வாலிபருக்கு 20 வயது தான் ஆகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு வாலிபருக்கு 21 வயது முடிந்தவுடன் திருமணம் நடத்துவதாக இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |