Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் அளித்த புகார்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் சிற்றரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சிற்றரசனும், அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் காவியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் இருவரும் திருப்பூர் பண்ணாரி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையில் தங்களது மகளை காணவில்லை என காவியாவின் பெற்றோர் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |