காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த பெண் கடந்த 9 மாதத்திற்கு முன்பு மாறன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில் கணவர் வீட்டில் திடீரென வினோதினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.