Categories
உலக செய்திகள்

பிரபல உணவகத்தில் காதலை வெளிப்படுத்திய நபர்…. அதிர்ச்சி கொடுத்த பெண்… வைரலாகும் வீடியோ…!!!

தென் ஆப்பிரிக்காவில் ஒரு உணவகத்தில் காதலை வெளிப்படுத்திய நபரின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரபல உணவகத்தில் வைத்து ஒரு நபர் தன் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, அந்த உணவகத்தில் வைத்து அவர் காதலை வெளிப்படுத்திய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு பெண் காசாளரிடம் பேசிக் கொண்டுள்ளார்.

https://twitter.com/Madame_Fossette/status/1519403493894852610

அப்போது, இந்த நபர் அந்த பெண்ணிற்கு பின்புறம் கையில் மோதிரத்துடன் நின்றுகொண்டிருக்கிறார். அதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து தன் காதலை வெளிப்படுத்தினார். எனவே, சுற்றி நின்ற வாடிக்கையாளர்கள் அனைவரும் உற்சாகமாக கரகோஷம் எழுப்பினார்கள்.

ஆனால், அந்த பெண் காதலை ஏற்க மறுத்துவிட்டார். மேலும், சில நிமிடங்களில் அங்கிருந்து வெளியேறி விட்டார். அந்த நபரை போலவே, கரகோஷம் எழுப்பிய வாடிக்கையாளர்களும் ஏமாற்றமடைந்தார்கள்.

Categories

Tech |