Categories
சினிமா தமிழ் சினிமா

“அன்பு, விட்டுக் கொடுக்காத உறவுகள்”….. ரத்தத்திற்கு மட்டும் தான் சாதி, மத பேதம் கிடையாது…. தளபதி சொன்ன குட்டி ஸ்டோரி….!!!!!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜு  தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  ஃபர்ஸ்ட் சிங்கிள்,  செகன்ட் சிங்கிள் என பாடல்கள் வெளியாகின. இந்த நிலையில் தான் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று  நடைபெற்றது.

நேற்று மாலை சரியாக 6 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் கோலாகல  இசை வெளியீட்டு விழா தொடங்கியது.  ஆனால் ரசிகர்கள் மதியம் 2 மணிக்கே வரத்தொடங்கினர். குறிப்பாக நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர்கள்  சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு மற்றும் பட குழுவினர் அனைவருமே வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்கள். இந்த இசை வெளியீட்டு விழாவை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். இந்நிலையில் வாரிசு வெளியிட்டு விழாவின்போது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த குட்டி ஸ்டோரியை நடிகர் விஜய் மேடையில் சொன்னார்.

அவர் கூறியதாவது, ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என 4 பேர் இருக்கும் நிலையில், அப்பா தினந்தோறும் 2 சாக்லேட் வாங்கி வருவார். இதில் அப்பா வாங்கி வரும் சாக்லேட்டை தங்கச்சி உடனே சாப்பிட அண்ணன் மட்டும் ஒளிச்சு வச்சு சாப்பிடுவான். ஒரு நாள் தங்கை அண்ணனிடம் சென்று அன்புனா என்ன என்று கேட்கிறாள். அதற்கு அண்ணன் நீ எடுப்ப என்று தெரிஞ்சும் நான் தினந்தோறும் அதே இடத்தில் சாக்லேட்டை வைக்கிறேன் அல்லவா அதுதான் அன்பு என்று கூறினார்.

அன்பு மட்டும் தான் உலகத்தை ஜெயிக்க கூடிய ஒரே ஆயுதம். அதில் ஒன்று உறவுகள். மற்றொன்று ‌ நண்பர்கள். ரத்த தானம்  செயலியை நான் தொடங்கியதற்கு காரணம் உலகில் ரத்தத்திற்கு மட்டும் தான் சாதி, மதம் என்ற வேறுபாடு கிடையாது. மனிதர்களை தான் பிரித்துப் பார்க்கிறோம். ஆனால் ரத்தத்தை பிரித்து பார்க்க முடியாது. அந்த செயலியில் இதுவரை 6,000 இணைந்துள்ள நிலையில் பலர் ரத்த தானம் செய்துள்ளனர். இந்த பெருமை எல்லாம் மன்ற நிர்வாகிகளுக்கு மட்டும் தான் சேரும். மேலும் பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் விட்டு விடுங்கள் என்று கூறினார்.

Categories

Tech |