தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலன் நடித்துள்ளனர்.
இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். லவ் டுடே படத்தின் 2 பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் லவ் டுடே படத்தில் 3 வது பாடல் ‘பச்சை இலை’ பாடலை இசையமைப்பாளர் யுவன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
The trippy #PachaElai from #LoveToday is here! Movie In Theatres from Nov 4th 😊
A @pradeep_ranganathan show✨@Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @archanakalpathi @aishkalpathi @venkat_manickam @iYogiBabu pic.twitter.com/iPOt7TWcYH
— Raja yuvan (@thisisysr) October 17, 2022