தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை வெற்றி உள்ளது. விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் லவ் டுடே படம் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் லவ் டுடே படத்தின் வெற்றியை முன்வைத்து பிரபல இயக்குனர் வசந்த பாலன் பேஸ்புக்கில் கூறியது, கோவிட் தொற்றுக்கு பிறகு பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே மக்கள் திரையரங்கு வந்து பார்ப்பார் என்ற மாயை நிலவி வந்தது.
மாயை அல்ல உண்மை என்ற நிலைமையில் இருந்தது. சின்ன படங்களை மக்கள் ஒடிடியில் பார்த்துக் கொள்வார்கள் என்று உறுதியாக சொல்கின்ற பெரும் திரளும் உரையாடலும் திரையுலகம் முழுக்க நிகழ்ந்த வண்ணம் இருந்தது. அதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் பெரிய படங்களின் வெற்றியை சிறிய படங்களில் சரிவு அந்த கணக்கிற்கு ஏற்றவாறு நிகழ்ந்தது. கடந்த ஆண்டு வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் வெற்றி ஓரளவுக்கு நம்பிக்கை வந்தது. இருப்பினும் பெரிய படங்கள், பெரிய நடிகர்கள், நட்சத்திர பட்டாளம் என்பதை தொடர்ந்த தகவல்கள் அமைந்த, நிலைமையை அனைவரும் மனதில் நிறுவியது. இந்நிலையில் லவ் டுடே வெற்றி புதுமுக நடிகரின் படமும் திரையரங்கில் பெரிதாக வெற்றி பெறும் என்கின்ற பெறும் நம்பிக்கையை பொதுவில் விதைத்துள்ளது. அநீதி திரைப்படத்திற்கான பெரும் நம்பிக்கையை தூவி உள்ளது. லவ் டுடே இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் அவர்களுக்கும் படக்குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.