மனைவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானத்தில் கல்லூரி விடுதி ஒன்றில் வேலை பார்த்து வருபவர் ரேவந்குமார். இவர் திருப்பதி அருகே உள்ள திம்மப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த நிரோஷா(21) என்ற பெண்ணுக்கும் பெற்றோர் அனுமதியோடு காதல் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான மூன்று நாட்களிலேயே ரேவந் தன்னுடைய மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நிரோஷா கடந்த 5 தினங்களுக்கு முன்பு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ரேவந் மனைவியின் ஆபாச படங்களை வாட்ஸ்அப் குழுவில் உள்ள தன்னுடைய நண்பர்களுக்கும், மேலும் தேவைப்படுவோருக்கு தன் மனைவியை விற்பதாகவும் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நிரோஷா தன்னுடைய பெற்றோர்களுடன் திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் ஏற்கனவே ரேவந் தன்னுடைய மனைவி வீட்டில் இருந்து 20 லட்சம் பணம் நகைகளோடு தாய் வீட்டிற்கு ஓடி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட தன்னுடைய கணவனை கைது செய்ய வேண்டும் என்று நிரோஷா ரேவந் வீட்டு முன்பு போராட்டம் நடத்தியுள்ளார். இதையடுத்து ரேவந் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் ரேவந் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று மகளிர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.