பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாகவும் மாடலாகவும் இருப்பவர் ஊர்வசி ரவுடேலா. இவர் தமிழில் அண்ணாச்சியுடன் இணைந்து தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ஒரு கிரிக்கெட் வீரருடன் தொடர்பில் இருப்பதாக நீண்ட நாட்களாகவே இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது.
இந்நிலையில் நடிகை ஊர்வசி தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் இது ஒரு முட்டாள்தனமான ஒப்பீடு என்று கூறி கடுமையாக விளாசியுள்ளார். மேலும் தனக்கு நடிகர்களை விட கிரிக்கெட் வீரர்கள் மீது அதிக மரியாதை இருப்பதாகவும் ஊர்வசி கூறியுள்ளார்