Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் ரச்சிதாவுடன் காதல்”….. உண்மையை போட்டுடைத்த ராபர்ட் மாஸ்டர்…. என்ன சொன்னாரு தெரியுமா…!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு வீட்டுக்குள் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் எல்லை மீறி நடந்து கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், ரெட் கார்டு கொடுத்து மாஸ்டரை வெளியே அனுப்ப வேண்டும் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நானும் ரச்சிதாவும் நல்ல நண்பர்கள். எங்கள் இருவருக்கும் இடையில் நட்பு என்ற உறவு மட்டும்தான் இருந்தது. நான் ரச்சிதாவுடன் தனிமையில் பேச ஆரம்பித்த நிலையில் அவருடன் நட்பு வளர்ந்தது என்று கூறியுள்ளார். மேலும் ராபர்ட் மாஸ்டரின் பேட்டி தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |