Categories
மாநில செய்திகள்

அவர் என் மீது கொண்ட அன்பும், பாசமும் எழுதி தீரா… நடிகர் பார்த்திபன் இரங்கல்…!!!

புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்துவந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன்(98 வயது) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் என பல துறைகளைச் சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் மறைவிற்கு நடிகரும், சிறந்த எழுத்தாளருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது :
தீரா – அவ்வளவு எழுதியும்.
கீ. ரா – மனதை விட்டு மறையாது அவ்வெழுத்துக்கள்!
நான் கொடுத்த கேக்கை ருசித்துவிட்டு, பட்சனம் சுவையாக இருந்தது. பெயர்தான் தெரியவில்லை என்றார். தன் மண்ணை பற்றி காதலோடு நிறைய எழுதிய கீ. ரா மீது நான் கொண்ட மரியாதையும், அவர் என் மீது கொண்ட அன்பும் எழுதி தீரா நடிகர் பார்த்திபன் கி. ரா மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |