Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அக்காவுடன் காதல்….. வாலிபரை கத்தியால் குத்திய தம்பி….. போலீஸ் வலைவீச்சு….. கோவை அருகே பரபரப்பு….!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அக்கவுடனான காதலை கைவிடக்கோரிய தகராறில்  வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணின் தம்பியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கோயம்புத்தூர்  மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை  அடுத்த தாமரைக் குளத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண்ணின் தம்பி மணிகண்டனுக்கும், தினேஷ்குமார்க்கும் இடையே  பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தினேஷ்குமாரை நேரில் சந்தித்த மணிகண்டன் அக்கா உடனான காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி கொலை செய்த மணிகண்டன் தப்பி ஓடிவிட்டார். தலைமறைவாக உள்ள அவரை காவல்துறையினர் தற்போது  வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |