Categories
இந்திய சினிமா சினிமா

“LOVE YOU பாப்பா”…. நடிகை ரெஜினாவுக்கு டுவிட்டரில் ப்ரபோஸ் செய்த பிரபல நடிகர்?….. யாருன்னு நீங்களே பாருங்க….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கேசன்ட்ரா. இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் பிசியான நடிகையாக இருக்கும் ரெஜினா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகராக இருக்கும் சந்தீப் கிஷன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் லோகேஷ் இயக்கிய மாநகரம் திரைப்படத்தில் கதாநாயகராக நடித்துள்ளார்.

இந்நிலையில் சந்தீப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரெஜினாவுடன் தான் எடுத்த செல்பி புகைப்படத்தைப் பகிர்ந்து, ஹாப்பி பர்த்டே பாப்பா. லவ் யூ. எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும் என ஆசீர்வதிக்கிறேன். இப்போது மகிழ்ச்சியாக இரு என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் ரெஜினா காதலித்து வருகிறார்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சமீபத்தில் கௌதம் கார்த்திக்- மஞ்சிமா ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அடுத்ததாக சந்தீப்  மற்றும் ரெஜினாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள.

Categories

Tech |