Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏற்பட்ட குடும்ப தகராறு…. காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாகப்பாடி கிராமத்தில் சின்னகுழந்தை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவரது தாய்மாமனான வினோத்குமார் என்பவர் குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகின்றார். இவருக்கு நிகிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக சிவகுமார் மற்றும் நிகிதா காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து சிவகுமார் குடும்பத்துடன் நிகிதா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சிவகுமாரும், நிகிதாவும் தினமும் செல்போனில் பேசி கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த நிகிதாவின் தந்தை கண்டித்துள்ளார்.

அதன் பின்னர் சிவகுமார் பெங்களூருவிலிருந்து நிகிதாவை நாகப்பாடிக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பிறகு காதல் ஜோடிகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமார், நிகிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |