காதல் ஜோடிக்குள் ஏற்பட்ட சண்டையில் காதலன் தனது காதலியை உயிருடன் மயக்க நிலையில் இருக்கும் போது கிரில் அடுப்பில் எரிந்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அர்ஜெண்டினா நாட்டில் வசித்துவருபவர் நைம் வேரா (25) இவரது காதலி ப்ரண்டா மைக்கலா (24) இவர்கள் இருவரும் பலவருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று காதலன் நைம்கும், காதலி மைக்கலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே நைம், மைக்கலாவை பிடித்து தள்ளியுள்ளார்.
இதில் மாடிப்படியில் இருந்து உருண்டு விழுந்த மைக்லாவிற்கு உயிர் உள்ளதா? அல்லது இறந்து விட்டாரா? என்று தெரியாமல் போலீசில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவரை கேக் தயார் செய்யும் கிரில் அடுப்பில் வைத்து எரித்து பின்னர் உடலை துண்டு துண்டாக்கி பாலிதீன் கவரில் அடைத்து பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளார்.
இந்த பாலிதீன் கவரை கைப்பற்றிய போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது மைக்கலா மயக்கநிலையில் இருக்கும் போதே மூச்சுத்திணறி நிலையில் உயிருடன் எரிகப்பட்டுள்ளார், என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.