மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. இலவச வாய்ஸ் கால், வீடியோ கால், SMS வசதி என அனைத்து வசதிகளையும் வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இது போக பயனர்களின் செய்தியை பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் வாட்ஸ்ஆப் முக்கிய பங்கு வகிப்பதால் பில்லியன் கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாகவே ஏகப்பட்ட அப்டேட்களை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது பழைய மெசேஜ்களை திரும்ப படிக்க ‘காலண்டர் ஐகான்’ என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தேதி, வருடத்தை குறிக்கும்போது, அந்த நாளில் பேசிய அனைத்து மெசேஜ்களையும் படிக்க முடியும். 2 ஆண்டுகளுக்கு முன்பே வாட்ஸ் ஆப் இந்த சோதனையை செய்திருந்தது. ஆனால், நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அப்டேட் தர உள்ளது.