Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காதல் என்றாலே இதான் நியாபகம் வரும்… மொத்தம் ஒரு டன் ரோஜாக்கள்… ஸ்பெஷல் தினத்தில் அமோக விற்பனை…!!

காதலர் தினத்தையொட்டி ஒரு டன் ரோஜாப்பூ விற்பனைக்காக திருப்பூர் மார்க்கெட்டில் குவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள காட்டன் மார்க்கெட்டுக்கு திருப்பூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த மார்க்கெட்டிற்கு ஒவ்வொரு சீசன்களிலும், அந்தந்த சீசனுக்கு ஏற்ற வகையில் காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவையை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த மார்க்கெட்டில் ரோஜாப்பூ விற்பனையானது அதிகமாக இருக்குமென்பதால், ஒரு டன் ரோஜா பூக்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, காதலர் தினம் என்றாலே ரோஜா பூ தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இதனாலேயே ஒரு டன் ரோஜாப்பூக்களை ஓசூரில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்து ஒரு கட்டில் சுமார் 15 முதல் 20 வரை ரோஜாப்பூக்கள் வைக்கப்பட்டு கட்டப்படுகிறது. அதோடு ரூபாய் 15 முதல் 20 வரை ஒரு ரோஜா பூ விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு விற்கப்படும் ரோஜா பூக்களை காதலர்கள் உற்சாகமாக வாங்கி செல்கின்றனர். மேலும் ரோஜா பூக்களை வாங்குவதால் மற்ற பூக்களின் விற்பனையானது சற்று மந்தமாகத்தான் இருக்கும் என்றும், ரோஜா பூவின் விலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் வியாபாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |